Aran Sei

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தனியார் இடங்களில் புதைக்க/எரியூட்ட அனுமதி – கர்நாடக அரசு

ர்நாடக மாநிலத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் சூழலில், தனி நபருக்குச் சொந்தமான இடங்களில் அல்லது பண்ணைகளில் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் எரியூட்டவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு – சுகாதாரத்துறை அழைப்பால் சர்ச்சை

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அம்மாநில வருவாய்த்துறை செயலர் என்.மஞ்சுநாதா பிரசாத், “கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல்  அல்லது எரியூட்டுதல் என்பது மிகவும் சிக்கலானது எனவே, அது தொடர்பாக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் உறவினர்கள், இறந்தவர்களது உடலை தனியார் நிலங்களில் அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அரசு இவ்வாறு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் இல்லையா?: விவசாய சங்கத்தினர் கேள்வி

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , துக்ககரமான இந்தச் சூழ்நிலையில் மரியாதையான வழியில் உடல்களை அடக்கம் செய்வது முக்கியமானது என்பதற்காகவும் மின்மயானங்களில் நெருக்கடியை தவிர்ப்பதற்காகவும் தனியார் இடங்களில் அடக்கம் செய்யவும், எரியூட்டவும் அனுமதிக்கப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

கடந்த  மார்ச் 1 முதல் தற்போது வரை கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,431  பேர் இறந்துள்ளனர். இந்தக்  காலகட்டத்தில் பெங்களூரு நகரம் (903), மைசூரு (103), கலபுரகி (69) மற்றும் பீடார் (47) ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இறப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்