Aran Sei

எட்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த காஷ்மீர் அதிகாரி – நீதி கேட்டு போராடும் குடும்பம்

காஷ்மீரின் கார்கில் பகுதியில், டிராஸ் உட்பிரிவில் உள்ள பத்ரா முகாமின் எல்லை பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த சுபான் அலி, ஜூன் 22, 2020 ஆம் தேதி உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

அலுவலக பணிக்காக ஜோஜியா – கார்கில் – லே நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி சுபான் அலி பயணித்த கார் டிராஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இந்தச் சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டது. கார்கில் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் மக்கள், சமூக மற்றும் மத அமைப்புகள் பல முறை முயன்றும் சுபான் அலியின் உடல் மீட்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்கு சில தினங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் ஷிங்கோ நதியில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இது சுபானின் உடலில் என சந்தேகிக்கப்படுவதால், அதை உறுதிபடுத்துவதற்காக, அவரின் குடும்பத்தினரின் மரபணு மாதிரிகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் கோரியதை அடுத்து, அவர்களிடம் சுபானி குடும்பத்தினரின் மரபணு மாதிரிகள் இந்திய அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டது.

காவல்நிலையத்தில் புகாரளித்தவரின் மர்ம மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்கள்

பல முறை முயன்று, எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வராததை அடுத்து எட்டு மாதங்களாக சுபானின் குடும்பத்தினருக்கு வலி மற்றும் துன்பம் மட்டுமே அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தி வயரிடம் பேசிய சுபானின் சகோதரர் ஷபான் அலி, “உடல் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்காத காரணத்தால் குடும்பம் மிகவும் துயரத்தில் உள்ளது. டி.என்.ஏ., பொருத்தமில்லை என, நிர்வாகம் வாய்மொழியாக கூறி விட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு எந்த நிதி உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஷபான், “நாட்டுக்குச் சேவை செய்யும்போது எங்கள் சகோதரர் இறந்துள்ளார், எனவே அவரது குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். ஆனால் எங்கள் குடும்பம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு முடிவே இல்லை. சுபானின் உடல்பற்றிய விசாரணை கூட முழுமையாக தீர்க்கப்படவில்லை.” என தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு தடுப்பு காவலில் ரோகிங்கியா அகதிகள் – உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யக் கோரி மனு

”மாநில, மத்திய மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நாங்கள் பல கடிதங்களை அனுப்பியுள்ளோம். எனினும், சுபனின் உடல் மீட்கப்படவில்லை. டிராஸ் நதியில் மாவட்ட நிர்வாகம் மற்றொரு தேடுதல் வேட்டையை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக சுபான் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என ஷபான் தெரிவித்துள்ளார்.

சுபனின் உடலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் செய்து வரும் கார்கிலின் சமூக ஆர்வலர் சஜாத் ஹுசைன். “சிவில் சமூகம், மத அமைப்புகளின் தன்னார்வத் தொண்டர்கள்,  மாவட்ட நிர்வாகம்  ஆகியோர் சுபனின் உடலைக் கண்டுபிடிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குடும்பம் நிறைய அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டது. பல மாதங்கள் கழித்தும், டிஎன்ஏ மாதிரி யின் அறிக்கைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

389 மலக்குழி மரணங்கள்: நம்முடைய மனசாட்சி நம்மை கொல்லாதிருக்க நடவடிக்கை எடுப்போம் – ராகுல் காந்தி

டி.என்.ஏ மாதிரிகள் பொருந்தவில்லை என்றால், டிராஸ் ஆற்றில் நீர் மட்டம் உயரும் முன் ஒரு பெரிய தேடுதல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜாத் கூறியுள்ளார்.

ஜூன் முதல் டிசம்பர் வரை சடலத்தைக் கண்டுபிடிக்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம், “ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.” என வருவாய் அதிகாரி டிராஸ் அஸ்கர் அலி கூறினார்.0

– லைலா பீ  (சுயாதீன ஊடகவியலாளர், கார்கில்)

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்