Aran Sei

வன உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள் – கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக பழங்குடியினர் போராட்டம் அறிவிப்பு

ர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் பழங்குடியினர்  வசித்து வருகிறார்கள். அவர்கள் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் அம்மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசியுள்ள மாநில ஆதிவாசி பழங்குடியினர் சமூக மன்றத்தின் துணைத் தலைவர் கே.கே.திம்மு, “2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம்  அமல்படுத்தப்பட்டது. ஆனால், நாகரஹோளே பகுதியில் உள்ள மக்களுக்கு இன்னும் அதற்கான பலன்கள் வழங்கப்படவில்லை. பல போராட்டங்கள் நடத்தியும், தொடர்புடையவர்களிடம் மனுக்களை அளித்த போதிலும் எங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது” என்று கூறியுள்ளார்.

பர்கூர் வன காப்பகம் அமைக்கும் முன் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – பழங்குடிகள் போராட்டம்

“வனத்தின் எல்லைக்குள் வனவாசிகளான பழங்குடிகள் தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொள்ள அச்சட்டம் அனுமதிக்கிறது.  வன உரிமைகளை பெறுவதற்குத் தேவையான விண்ணப்பங்களை பழங்குடியினர் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்குரிய பலன் மறுக்கப்படுகிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பொய்களாலும், போலியான சுற்றுச்சூழல்வாதிகளின் கருத்துகளாலும் எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும்,  காடுகளுடன் ஆத்மாத்தமான உறவை பழங்குடியினர் கொண்டிருப்பதால், காடுகளில் இருந்து அவர்கள் வெளியேற மாட்டார்கள் என்றும் மாநில ஆதிவாசி பழங்குடியினர் சமூக மன்றத்தின் துணைத் தலைவர் கே.கே.திம்மு தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்