Aran Sei

பத்திரிகையாளர் மீது வழக்கு – அடிப்படை உரிமையை வழங்குங்கள் – உச்சநீதி மன்றம்

த்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகளைப் பூர்த்தி செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

“சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திக் கப்பன் தன்னுடைய குடும்பத்தாரை அணுக வழி செய்யக்கோரியும் அவருக்கான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கேரள பத்திரிகையாளர் சங்கம் உச்சநீதி மன்றத்தை அணுகியது.” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பன் அக்டோபர் 5 ம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சித்திக் காப்பன் – உச்ச நீதிமன்றத்தில் அவசர பிணை மனு

இதற்கு முன்பு, கேரள பத்திரிகையாளர் சங்கம், கப்பன் எங்கிருக்கிறார் என்று அறிய ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அலகாபாத் நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது தலையிட முடியாதென்று உச்சநீதி மன்றம் அந்த மனுவை நிராகரித்தது.

அதன்பிறகு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வகுப்புவாத வெறுப்பு மற்றும் குற்றங்களை பரப்பியதற்காக உத்தரபிரதேச காவல்துறை கப்பனுக்கு எதிராக முதல் தகவலறிக்கைப் பதிவு செய்தது.

 

இந்திய ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் – ‘உடனே தள்ளுபடி செய்க’

உச்சநீதிமன்றத்த்தில், கேரள பத்திரிகையாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் ”ஊடகங்கள் ஜனநாயகத்தின் சுவாசம். ஒரு ஊடகவியலாளருக்கு நிலையான நேர அட்டவணை இல்லை, திட்டமிடல் இல்லை, வாராந்திர விடுமுறை இல்லை.  எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது, அது வெள்ளம், பயங்கரவாதம், குற்றங்கள், அரசியல் முன்னேற்றங்கள், எதையும் கணக்கில் கொள்ள முடியாது. பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர்.  தன்னிச்சையான கைது பத்திரிகையாளர்களின் பணியை தீவிரமாக பாதிக்கிறது. செய்திகளைப் பெறுவதற்கான மக்களின் உரிமையைபாதிக்கிறது”  என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து வின் செய்தி கூறியுள்ளது.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

 

மதூர் சிறையில் இருந்த கப்பனை அவரது வழக்கறிஞர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ சந்திக்க முடியவில்லை, இது ஒருவரின் அடிப்படை உரிமையை மறுப்பதாகும்  என்று பத்திரிகையாளர்களின் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொரானா வைரஸுக்கு எதிரான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட இல்லாமல் மதூரின் புதிய தற்காலிக சிறையில் உள்ள கைதிகள் கொடூரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கப்பன் தனது வழக்கறிஞர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது . மதூர் சிறைக்குள் கைதிகள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மதூர் மாவட்ட நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்