Aran Sei

பட்டினி குறியீட்டு பட்டியல்: 101- வது இடத்தில் இந்தியா – மோடியே காரணமென குற்றஞ்சாட்டிய கபில்சிபில்

லக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்துக்குப் பின்தங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

2021-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இந்தியா இருந்தது.

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76-வது இடத்திலும், வங்கதேசம் 76-வது இடத்திலும், மியான்மர் 71-வது இடத்திலும், பாகிஸ்தான் 92-வது இடத்திலும் உள்ளன.

உலக பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் 94 வது இடத்தில் இந்தியா – பதுக்கல்காரர்கள் போல செயல்படும் ஒன்றிய அரசே காரணம் என குற்றச்சாட்டு

இந்த அறிக்கை குறித்து, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இவற்றை அழித்தமைக்காக மோடி ஜி-க்கு வாழ்த்துகள்.
1.வறுமை, 2.பட்டினி, 3. இந்தியாவை உலக அளவில் வலுவான நாடாக்கியது, 4. நம்முடைய டிஜிட்டல் பொருளாதாரம், 5.…… இன்னும் அதிகமாக….” என்று கூறியுள்ளார்.

“உலக பட்டினிக் குறியீடு: 2020-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 94-வது இடம், 2021-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 101-வது இடம். வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைவிடப் இந்தியா பின்தங்கி இருக்கிறது” என்று கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்