Aran Sei

குடியரசு தலைவரின் வருகைக்காக மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்து – வாகன நெரிசலில் சிக்கிய கொரோனா நோயாளி உயிரிழப்பு

கான்பூரில் குடியரசு தலைவரின் பயணத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்தால் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கிய கொரோனா நோயாளி வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

வாகன நெரிசலில் உயிரிழந்த 50 வயதான வந்தனா மிஸ்ரா, இந்திய தொழில்கள் சங்கத்தின் கான்பூர் பிரிவு பெண்கள் பிரிவு தலைவராக இருந்தவர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா

இது தொடர்பான கான்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியிருப்பதோடு, இது ஒரு பெரிய பாடமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் பதிவில், வந்தனா மிஸ்ராவின் மறைவால் குடியரசு தலைவர் வேதனையடைந்திருப்பதாகவும், மிஸ்ராவின் இறுதி சங்கில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘கொரோனா காலத்தில் சார் தாம் புனிதயாத்திரை நடத்துவது முட்டாள்தனமானது’ – உத்தரகண்ட் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு

ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், லால் சந்திப்பு மற்றும் கோவிந்தபுரி மேம்பாலத்திற்கு இடையிலான வாகன நெரிசலில் மிஸ்ராவின் வாகனம் சிக்கிக் கொண்டதாக இந்திய எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

”முன்னதாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மிஸ்ரா, உடல்நிலை மோசமடைவதை உணர்ந்ததை அடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். வழியில் வாகனத்தில் அவருடன் இருந்த மருத்துவரான குடும்ப உறுப்பினர் சிபிஆர் கொடுக்க முயன்றார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஒரு மணி நேரத்திற்கு மேலாக வந்தனா மிஸ்ராவின் கார் வாகன நெரிசலில் சிக்கியிருந்தது. இதனால் ஏற்பட்ட தாமதமே உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது. மருத்துவமனையை அவர் அடைந்தபோது, அவர் உயிரிழந்திருந்தார்” என பெயர் சொல்ல விரும்பாதவர் கூறியதாக டெக்கான் ஹெரால்ட் மேற்கோள் காட்டியுள்ளது.

ராமர் கோவில் நில ஊழல்: ஆவணங்களை ஒப்படைக்க தயார் – ஆம் ஆத்மி எம்.பி ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கடிதம்

கான்பூர் ஆணையர் அலுவலகத்தின் மற்றொரு ட்விட்டர் பதிவில், ”பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது. குறிப்பாக மருத்துவ அவசர நிலைகளில் இருப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக துணை ஆய்வாளர் சுஷில் குமார் மற்றும் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், தெற்கு மண்டல் கூடுதல் காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டம் இயற்ற வேண்டும் – வேளாண் சங்கங்கள் வேண்டுகோள்

”குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு ரயிலில் வெள்ளிக்கிழமை கான்பூர் வந்தடைந்தார். அவரை உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கான்பூர் வந்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தி வயர் தெரிவித்துள்ளது.

”அவரது மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒருப் பகுதியாக, கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள பரான்க் கிராமத்திற்கு இன்று (ஜூன் 27) செல்கிறார்” என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்