Aran Sei

சாவர்க்கர், கோல்வால்கர் கருத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்க கண்ணூர் பல்கலைக்கழகம் முடிவு – வல்லுநர் குழுவின் பரிந்துரை ஏற்பு

Image credit : thewire.in

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகம், வி.டி சாவர்க்கர் மற்றும் எம்.எஸ் கோல்வால்கரின் படைப்புகளைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சாவர்க்கரின் “இந்துத்துவா: யார் இந்து”, கோல்வால்கரின் “Bunch of Thoughts-சிந்தனைத் தொகுப்பு”, “நமது தேசியம் வரையறுக்கப்பட்டவை”, தீன்தயாள் உபாத்யாயாவின் “ஒருங்கிணைந்த மனிதநேயம்” மற்றும் பால்ராஜ் மாதோக்கின் “இந்தியமயமாக்கல்: என்ன, ஏன், எப்படி” ஆகியவற்றின் சாரங்களை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்ததற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் இடது சாரி கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கேரள மாநிலத்தின் கல்வியை காவிமயமாக்க உதவுகிறது என்று குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் பேசுகையில், “நவீன இந்திய அரசியல் சிந்தனைகள் பற்றிய விவாதம் என்ற தேர்வுக்கான பாடத்திட்டத்தில்தான் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது செமஸ்டரிலிருந்து இந்த தாள் நீக்கப்படும். தேவையான திருத்தங்களுக்குப் பின்னர், நான்காவது செமஸ்டரில் சேர்க்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்