Aran Sei

கடலரிப்பு ஏற்பட்டு குமரிமாவட்டம் நீரில் மூழ்கும் அபாயம் – சரக்கு பெட்டக முனையத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் அமையவிருக்கும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையத் திட்டத்திற்கு எதிராக நேற்று (மார்ச் 27) மிகப்பெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தியிருக்கிறாரகள்.


கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் முதல் கீழமணக்குடி பகுதிவரை அறிவித்த பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையத் திட்டத்திற்கு எதிராக நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் “கடல் வழி கரை வழி ” என்ற போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

 

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

கீழமணக்குடி மக்கள் ஒருங்கிணைத்த அந்தப் போராட்டத்தில் அப்பகுதியின் மீனவ சங்க பிரதிநிதிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர்.சுந்தர்ராஜன் , டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.

இந்தப் போராட்டத்தின்போது அப்பகுதி மக்கள் அமையவிருக்கும் சரக்கு பெட்டக முனையத்திற்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அரண்செய்யிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர்.சுந்தர்ராஜன் , “இது சரக்கு பெட்டகத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் தெற்கு எல்லை கன்னியாகுமரியா? அல்லது நெல்லையா ? என்பதை முடிவு செய்வதற்கான போராட்டம் ,இந்த முனையம் அமைந்தால் குமரி மாவட்டம் இல்லாமல் போய்விடும் ” என்றும் தெரிவித்தார்.

புறக்கணிக்கப்படும் தமிழக ரயில் திட்டங்கள்: ‘தேவையோ கோடிகள்; கொடுப்பதோ ஆயிரங்கள்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

இந்தத் திட்டம் நிறைவேறினால் கடலரிப்பு ஏற்பட்டு நிலம் தண்ணீரில் மூழ்கும் என்றும் , மணக்குடி முகத்துவரத்தை மணல் அடைத்துப் பழையாற்றில் வெள்ளம் ஏற்படும் என்றும் பொறியாளர்.சுந்தர்ராஜன் கூறினார்.

மேலும், சுசீந்திரம் ,நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்கள் வெள்ளம் சூழ்ந்த பிரதேசங்களாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

கீழமணக்குடி மக்களின் இந்தப் போராட்டத்தில் 10,000 மேற்பட்ட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்