Aran Sei

‘ செல்லூர் ராஜு அமைச்சராக செயல்படாமல், விஞ்ஞானியாக செயல்பட விரும்பினார் ‘ – கனிமொழி விமர்சனம்

டந்த 10 ஆண்டுகளாக மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் அமைச்சராக செயல்படுவதைவிட, விஞ்ஞானியாக பணியாற்ற வேண்டும் என்றே விரும்புவதால் அவரால் எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை என்றும் திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 8) மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுடைய தொகுதியான மதுரை மேற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கனிமொழி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ்கான பெரும்போராட்டத்துக்கு மக்கள் தயாராகவேண்டும் – சு.வெங்கடேசன்

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, “அதிமுக.வின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளன. மதுரையில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை. டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் இடையேயான பாலத்தை பார்க்கும்போது மக்கள் வரிப்பணம் எப்படி வீணாக்கப்படுகிறது என்பதை கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது. இந்த பாலம் தொடர்பாக வழக்கு இருப்பதால்தான் பணியை முடிக்க முடியவில்லை என முதல்வரே சட்டமன்றத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். விசாரித்தபோது அப்படி எந்த வழக்கும் இல்லை என தெரிய வந்தது.” என்று கூறியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – சீ. நவநீத கண்ணன்

“குளம் தூர்வாரியதாக சொன்னார்கள். அதுவும் ஒழுங்காக செய்யவில்லை. மதுரைக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டுவர அடிக்கல் நாட்டினர். அதையும் 3 மாதத்தில் செயல்படுத்தமாட்டார்கள். வைகை ஆற்றை தேம்ஸ் நதியாக மாற்றுவேன் என்றும், மதுரை மேற்கு தொகுதியை சிட்னியாக மாற்றுவேன் என்றும் கூறினார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ” என்று நினைவூட்டிய கனிமொழி, “வைகையில் நுரையும், சாயக்கழிவும்தான் கலக்கிறது. அவர் அமைச்சராக செயல்படுவதைவிட, விஞ்ஞானியாக பணியாற்ற வேண்டும் என்றே விரும்புவதால் அவரால் எந்த பணியையும் செய்ய முடியவில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் எந்தத் தொழிற்கூடமும் வராததால் வளர்ச்சியை எங்கும் காணமுடியவில்லை என்று கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்