இந்த நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் பாஜகவின் காலடியில் கொண்டுபோய் அடகு வைத்ததால்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாஜக காப்பாற்றியது என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 10) இரவு, திருப்பூர் தெற்கு மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் நடந்த திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
‘ செல்லூர் ராஜு அமைச்சராக செயல்படாமல், விஞ்ஞானியாக செயல்பட விரும்பினார் ‘ – கனிமொழி விமர்சனம்
அப்போது, “நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டோம் என்று முதல்வர் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். நான் கேட்கிறேன், ஆட்சியிலே இருந்தது உங்களுடைய திறமையினாலா? அல்லது பாஜக உங்களைக் காத்து நின்றதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அதுவும் எப்படி உங்களைக் காப்பாற்றினார்கள்? நீங்கள் தமிழ்நாட்டின் அடையாளங்கள், பெருமைகள், இந்த நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் அவர்கள் காலடியில் கொண்டுபோய் அடகு வைத்ததால்தான் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றினார்கள்.” என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு – போராட்டம் நடத்தச் சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல்துறை
மேலும், “நீட் தேர்வை ஒழுங்காக எதிர்த்தீர்களா? இல்லை. அதனால் எத்தனை இளைஞர்கள், இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள்? அவர்களின் மருத்துவக் கனவுகளை எல்லாம் சிதைத்தீர்கள். எந்தப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்று சொன்னார்களோ அவர்களுக்கு மருத்துவக் கல்வி கொடுப்பதற்காக தலைவர் கருணாநிதி கட்டியவைதான் அரசு மருத்துவக் கல்லூரிகள். அந்த மருத்துவக் கல்லூரிகளில் இன்று நம்முடைய பிள்ளைகளுக்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.