கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கரௌலி மற்றும் ஜோத்பூர் நகரங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நடந்தது. அதைத் தொடர்ந்து, காவலர்கள் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 6), நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள கங்கனா ரனாவத், “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப் பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்” என்று கூறியுள்ளார்.
“கலவரங்கள் காரணமாக ராஜஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று திரைக் கலைஞர் கங்கனா ரணாவத்தெரிவித்துள்ளார்.
Source: Times Now
சரக் சபத்தில் சரக்கு இருக்கா? | Maruthaiyan Inetrview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.