Aran Sei

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவு – விமர்சனம் செய்த நடிகை கங்கணா ரணாவத்

credits : the indian express

ருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸி பன்னு பதிவிட்டுள்ள தொடர் ட்விட்டர் பதிவுகளுக்குக் நடிகை கங்கணா ரணாவத், பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கணா ரணாவத், ”நீ அற்பமானவள் தான், ஏனென்றால் நீ பாலியல் வன்கொடுமையாளர்களுக்கான பெண்ணியவாதி… வருமானவரி ஏய்ப்பு செய்ததாக, 2013 ஆம் ஆண்டி உனது ரிங் மாஸ்டர் அனுராக் கஷ்யப் வீட்டில் சோதனை நடைபெற்றது… வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி இருக்கிறது, நீங்கள் குற்றம்மற்றவர்கள் என்றால் நீதிமன்றம் சென்று நிருபித்து காட்டுங்கள்… ”எனத் தெரிவித்திருந்தார்.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக டாப்ஸி பன்னு பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவுகளில், “மூன்று நாட்கள் தீவிர தேடலில் மூன்று விஷயங்கள்  முதன்மையாக இருந்தது. 1. கோடை விடுமுறைகள் வரவுள்ள நிலையில் பாரிஸில் நான் வைத்திருப்பதாக ‘கூறப்படும்’ பங்களாவின் சாவிகள்”, “ பின்வரும் ட்வீட்களில்,”நான் ஏற்கனவே மறுத்துவந்த எதிர்கால தேவைக்காக நான் வைத்திருப்பதாக கூறப்படும்  5 கோடி ரூபாய்க்கான ரசீது. 3. மதிப்பிற்குரிய நிதியமைச்சர் கூற்றின்படி, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனை தொடர்பாக எனது நினைவுகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

டாப்ஸி தனது ட்விட்டர் பதிவின் இறுதியில், 2019 ஆம் ஆண்டு கங்கணாவின் சகோதரி ரங்கோலி சண்டேல், டாப்ஸியை கங்கணாவின் மலிவான நகல் என விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, நான் இனி மலிவானவள் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்