Aran Sei

’பெண்ணுரிமை என்பது ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான போர்’ – பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா பாசின் மறைந்தார்

விஞர், எழுத்தாளர் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா பாசின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  இன்றைய  தினம்  உயிரிழந்துள்ளார். அவருக்கு 75 வயது .

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள   சமூகச்செயற்பட்டாளர் கவிதா ஸ்ரீவஸ்தவா, “நாம் தோழி, கமலா பாசின் இன்று அதிகாலை மூன்று மனியளவில் உயிரிழந்துள்ளார்.  இது  இந்தியா மற்றும் தெற்காசியாவில்  உள்ள பெண்கள் இயக்கத்தினருக்கு மிகப்பெரும் பின்னடைவு. துன்பம் எதுவாக இருந்தாலும் அவர் வாழ்க்கையை கொண்டாடினார். கமலா நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றும் கூறியுள்ளார்.

யார் இந்தக் கமலா பாசின் ?  அவரது இறப்பு  ஏன் பெண்ணுரிமை  இயக்கத்திற்கு  பின்னடைவாக  இருக்க  வேண்டும்? அவரைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் 1991 ஆம் ஆண்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

1991 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பெண்கள் ஆய்வு மாநாட்டில்  பெண்கள் புடை சூழ ஒரு கையில் சிறிய தோல் இசைக்கருவியை வைத்த படி , “என் சகோதரிகள் விடுதலையை  விரும்புகிறார்கள்! என் மகள் விடுதலையை விரும்புகிறாள்! ஒவ்வொரு பெண்ணின் முழக்கம் விடுதலை”  என்று பெண்ணுரிமை குறித்தப் பெருவெடிப்போடு கவிதை பாடிய அந்தப் பெண் தான்  கமலா பாசின்.

‘பிரதமர் மோடி, முதல்வர் யோகிஆதியநாத்தை விமர்சித்து வெளியான காணொளி’ – இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர்

அவர் அந்த மேடையில்  ‘ஆசாதி’ அதாவது விடுதலை எனும் சொல்லை முழங்கினார். இன்று டெல்லி மானவர்கள் போராட்டத்திலும், அநீதிகளுக்கு எதிரான இடங்களில் எல்லாம் ஒலிக்கும் முழக்கமான ஆசாதி என்ற முழக்கத்தை முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு, ஜியா-உள்-ஹக் ஆட்சிக்கு எதிரான  போரட்டத்தின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுரிமை செயல்பட்டாளர்கள் பயன்படுத்தியதாக அவரது பேட்டி ஒன்றில் குறிபிட்டுள்ளார் பாசின்.

அந்தப் போராட்டத்தில்  “பெண்ணின் முழக்கம் -ஆசாதி  , குழந்தைகளின் முழக்கம் – ஆசாதி , நாங்கள் எடுத்துக்கொள்வோம் – ஆசாதி , இது அழகான கோஷம் – ஆசாதி ”  என்று  முழக்கம் எழுப்பியதாக கமலா பாசின் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பேரறிவாளனுக்கு ஐந்தாவது முறையாகப் பரோல் நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு

197௦ ஆம் ஆண்டு  தனது  சமூக செயல்பாட்டைத் தொடங்கிய அவர்,  பெண்ணுரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் அல்ல, அது ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான போராகும். குறிப்பாக இரண்டு சிந்தனைக்கு எதிரான போராகும் என்று தனது செயல்பாட்டை வகுத்துக் கொண்டவர்.

அவரது கவிதைகள் குறித்து தெரிவித்த எழுத்தாளரும், பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான ஊர்வசி புட்டாலியா, “இது பெண்ணிய இயக்கத்தின் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். பின்னர், இது பிற  குழுக்களுக்கும்  கூட  ஒரு உத்வேகமாக மாறியது. ஆனால், எங்கள் மனதில், அது உந்துதல்   தரும் பெண்ணிய கோஷமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது” என்று  கூறினார்.

கவிதைகள் எழுத்து என்று மட்டுமல்லாமல்  தெற்காசிய பெண்ணியச் சிந்தனையாளர்கள் கூட்டமைப்பு,   ஜாகோரி- மகளிர் வள மற்றும் பயிற்சி மையம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜாகோரி கிராமீன் ஆகிய பெண்கள் சார் அமைப்பில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வேண்டுகோள்

அவர் பாலின கோட்பாடு , பெண்ணுரிமை குறித்து எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். பல புத்தகங்கள் 3௦ க்கும் மேற்பட்ட மொழிகளில்   மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கம்  ஆண்களை மனிதத் தன்மையற்றவர்களாக்குகிறது. அது பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.   [ Patriarchy dehumanises men. It affects them as much as women.”] – கமலா பாசின். 

 

 

 

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்