Aran Sei

ஹெலிகாப்டர் தரையிறங்க இடம் மறுத்த மாவட்ட நிர்வாகம் : பிரச்சாரத்தை ரத்து செய்த கமலஹாசன்

credits : the new indian express

ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கான அனுமதியை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வழங்காததால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் இருந்து,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இதற்காக, நேற்றைய தினம் கோவை வந்த அவர், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தவர் தொ.ப – கமல்ஹாசன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இங்கே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதற்கு எதிரான குரலாக நான் இருப்பேன்” என்று தெரிவித்திருந்தார்

’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்

இந்நிலையில், இன்றைய தினம் கொமரப்பாளையம் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை எதிர்த்து குரல் கொடுப்பேன் : கமல்ஹாசன் வாக்குறுதி

இது தொடர்பாக பேசிய மக்கள் நீதி மய்யத்தின் கட்சி உறுப்பினர்கள், ”இன்று மதியம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கொமரப்பாளையம் மற்றும் பவானி பகுதியில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஹெலிகாப்டரைத் தரையிறக்குவதற்கான ( Helipad ) அனுமதி கோரப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம், அதற்கு அனுமதி வழங்காதி நிலையில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கே.மேகராஜ், ”விதிகளின் படி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவற்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் நடத்துவதற்கு 48 மணி நேரம் முன்னரே, அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்