Aran Sei

‘இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு’ – நீட் மரணங்கள் குறித்து கமல் ஹாசன் விமர்சனம்

credits : The Indian Express

து ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு என்று நீட் தேர்வு மரணங்கள் குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி – ஜெயலட்சுமி தம்பதியின் இளைய மகள் கனிமொழி. இவர் நாமக்கலில் உள்ள கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) நடைபெற்ற நீட் தேர்வைத் தஞ்சையில் உள்ள தாமரை இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் எழுதியுள்ளார்.

ஓர் உயிரை இழந்த பிறகு நீட்டுக்கு எதிராக நாளை தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 13) மாலை மாணவி கனிமொழி, துளாரங்குறிச்சி விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் தோல்வி பயம் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண்களுடன் 93 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு பயத்தால், தேர்வு எழுதயிருந்த சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ், நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) உயிரிழந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா ஒன்று நேற்று (செப்டம்பர் 13) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

இந்நிலையில், நீட் இறப்புகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், “ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், “இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்