Aran Sei

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

றத்தின் பக்கம் நிற்கும் என்னைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதில், அவர் ஊழலற்றவர் என்றும் தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

அதற்கு சமூகவலைதலங்களில், கமல்ஹாசனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையில், நேற்று (டிசம்பர் 6) தருமபுரியில், செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “பேராசிரியர் நியமனம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் கொடுத்த பேட்டிக்காக, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளும் நேரம் வந்துள்ளதால், ஏதேனும் பேச வேண்டுமென கமல்ஹாசன் பேசுகிறார்.” என்று கூறியிருந்தார்.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

இந்நிலையில், இன்று (டிசம்பர் 7) தனது ட்விட்டர் இந்த விமர்சனங்கள் குறித்து கருத்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதில், “அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது” என்று கூறியுள்ளார்.

”வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் திண்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?” என்று மறைமுகமாக திமுக மற்றும் அதிமுக மீதான ஊழல் புகார்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

மேலும், “தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்