Aran Sei

’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன் பிள்ளைக்காக கால் நூற்றாண்டுகளாக போராடி வருவதாக அற்புதம்மாளைச் சுட்டிக்காட்டிய கமல்ஹாசனுக்கு, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தன் வணக்கங்களை தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 17), தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிப்பரப்பப்பட்ட நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழுவர்களில் ஒருவரான பேரிறிவாளனின் தாய் அற்புதம்மாள் குறித்து பேசியுள்ளார்.

எழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்

“தன் பிள்ளைக்காக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் அற்புதம்மாள் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு கையெழுத்திற்காக. மூச்சிருக்கும் வரை நான் போராடுவேன் என்று அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அற்புதம்மாளைப் போன்ற அம்மாக்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தன் கடைசி மூச்சு இருக்கும் வரை, தன் பிள்ளைகளுக்காக போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களின் மடியில் படுத்துக்கொள்ளுங்கள். எல்லா பிரச்சனையும் நீர்ந்துவிடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்காக ’மிஸ்டு கால்’ இயக்கம் – தலைவர்கள், நடிகர்கள் அழைப்பு

கமல்ஹாசனின் இந்த பேச்சு குறித்து பேரிறிவாளனின் தாய் அற்புதம்மாள் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

அதில், குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்