Aran Sei

தேவியானந்தல் பகுதியில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வி.சி.க நிதி உதவி -குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைநிற்போமென உறுதி

ள்ளக்குறிச்சி மாவட்டம் தேவியானந்தல் பகுதியில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மூவர் கொடூரமாகக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 1 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது.

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

தேவியானந்தல் பகுதியில் , கடந்த 2 ஏப்ரல் அன்று திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி சரஸ்வதி என்ற பெண்ணை அப்பகுதியை சார்ந்த மூவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட மூவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் பொது செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமார் வழங்கியுள்ளார்.

தொழிலாளர் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர் மரணம்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மேலும் ,இந்த வழக்கைச் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரும்வரை துணை நிற்போம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்