உத்தர பிரதேச அரசை நேரடியாக எதிர்த்து வந்த மருத்துவர் கஃபீல் கான், கோராக்பூர் மாவட்ட காவல்துறையின் குற்றப் பிண்ணனி கொண்ட நபர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் கோராக்பூர் மாவட்டத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 100 க்கும் மேற்பட்ட கைகுழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லையெனக் கூறிய உத்தர பிரதேச அரசாங்கம் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்தது.
அந்தச் சம்பவத்தின் பலியாடாக கஃபீல் கான் ஆக்கப்படாரெனப் பலர் குற்றம் சாட்டினர். 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், 2019 ஆம் ஆண்டு அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்து பதியப்பட்டு வந்ததன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை வெறுப்பை பரப்புவதாகக் கூறி உத்தர பிரதேச அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல் கானை கைது செய்தது.
கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கஃபீல் கான் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அவருடைய பேச்சு வெறுப்பையும் வன்முறையையும் பரபரப்பவில்லையென நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், குழுந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் கோராக்பூர் மாவட்டத்தின் குற்றப் பிண்ணனிகள் கொண்ட நபர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 81 பேருடன் சேர்ந்து இணைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவருடைய விவரங்கள் அனைத்தும் காவல்துறையினால் தொடர்ந்தது குறிக்கப்படும், அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அந்தப் பட்டியலில் 1534 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மருத்துவர் கஃபீல் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”உத்தர பிரதேச அரசாங்கம் என்னுடைய விவரக்குறிப்பை தொடங்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள் என் வாழ்நாள் முழுவதும் என்னைக் கண்காணிக்க இருப்பதாகக் கூறியுள்ளனர். மகிழ்ச்சி ! என்னை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க இரண்டு காவலர்களையும் பணியில் அமர்த்துங்கள். இதன் மூலம் என்மீது சுமத்தப்படும் போலி வழக்குகளிலிருந்து என்னைப் பாதுகாத்து கொள்வேன். உத்தர பிரதேசத்தின் நிலைமை என்னவென்றால், இங்குக் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவதில்லை, அப்பாவிகள் தான் கண்காணிக்க்ப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
न्यायालय और जाँच रिपोर्ट में चिकित्सा लापरवाही / भ्रष्टाचार से दोषमुक्त हूँ ऑक्सिजन कांड के आरोपी लिखना बंद करें 🙏
इसी वजह से अपराध अधिक है और अपराधियों के हौसले बुलंद हैं
अपराधियों पर कोई करवाई नहीं और राजनीतिक द्वेष में निर्दोष ,बेगुनाह पर करवायी https://t.co/rVSqS1GXur pic.twitter.com/3gb0bcOpvz— Dr Kafeel Khan (@drkafeelkhan) January 30, 2021
2018 ஆம் ஆண்டே கஃபீல் கானுடைய விவரக்குறிப்பு காவல்துறையால் தொடங்கப்பட்டுவிட்டது என்றும் தற்போது தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அவருடைய சகோதரர் அதீல் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.