Aran Sei

கச்சநத்தம் படுகொலை வழக்கு – 27 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர்  3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்று சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். 2018-ம் ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

டெல்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு தடை – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்.

கச்சநத்தம் படுகொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த மொத்தம் 27 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அண்மையில் நிறைவடைந்தன. இதனையடுத்து கடந்த ஜூலை 27-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் திருப்பாச்சேத்தி பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1-ந் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அரசு பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 27 பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனால் திருப்பாச்சேத்தி சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் உருவான கதை | Karumathur Manimaran | Viruman Song | Kanja Poovu Kannala

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்