கொரோனா தொற்று அதிவேகமாக உயர்ந்து வரும் சூழல் நிலையைத் தேசிய மருத்துவ அவசர நிலையாக அறிவிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”
கொரோனா -19, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,
மோடி அவர்களே ; தேசிய மருத்துவ அவசரநிலையாக அறிவியுங்கள்,
தேர்தல் ஆணையம் ; பேரணிகளை தடை செய்ய வேண்டும் ,
நீதிமன்றம்; மக்களின் வாழ்வை உறுதிபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்துக் கௌதம் நவலகா மேல்முறையீடு – தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்
கடந்த நான்கு நாட்களில் ஏறக்குறைய 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.