Aran Sei

எழுவர் விடுதலை: ‘கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோருவது நியாயம் இல்லை; விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சி வென்றதில்லை’ – காங்கிரஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான கேள்விக்கு, கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோருவதில் எந்த நியாயமும் இல்லை என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற்றதே இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், விவசாய சட்டங்களை எதிர்த்துத் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லையே என்ற கேள்விக்கு, “பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மண்டி முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் அங்குப் போராட்டம் வலுவாக உள்ளது. தமிழகத்தில் அரசின் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதனால் இங்குப் பெரிய அளவில் போராட்டங்கள் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் தீர்மானிக்க முடியும் என்ற தமிழக ஆளுநரின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோருவதில் எந்த நியாயமும் இல்லை. ஏராளமான தமிழர்கள் பல்லாண்டுகளாகச் சிறையில் இருக்கும்போது, இந்த 7 பேரை மட்டும் விடுதலை செய்யக் கோருவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் எதிர்க்கமாட்டோம். ஆனால், அவர்களின் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற்றதே இல்லை. இந்த வரலாற்று உண்மையை மட்டும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்