Aran Sei

‘அரக்கோணம் சாதியப் படுகொலை’ – நீதி விசாரணை கோரும் புதிய தமிழகம் கட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரக்கோணம் அருகே சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா ஆகிய இரு இளைஞர்கள் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு மறுநாள் கொலையுண்டுள்ளனர். தேர்தல் பகையோ அல்லது சாதிய பகையோ எதுவாயினும் இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளார்.

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர்களது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்