தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனை நேற்று (மார்ச் 4) அவரது இல்லத்தில் சந்தித்து, நீண்ட நேர உரையாடியுள்ளார்.
அப்போது, தற்போதைய ஒன்றிய அரசு சரியாக செயல்படவில்லை என்றும் நாட்டை புதிய திசையில் வழிநடத்துவது அவசியம் என்றும் கே.சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள கே.சந்திரசேகர் ராவ், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பின்தங்கிய நிலையிலேயே இந்தியா உள்ளது. இன்றும் கூட, ஒன்றியத்தில் உள்ள அரசாங்கம் சரியாக செயல்படவில்லை. அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி: டெல்லி விரைந்த சந்திரசேகர் ராவ்
“முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடனான என் சந்திப்பின் போது இந்த பிரச்சினை குறித்தும் விவாதித்தோம். நம் நாட்டை ஒரு புதிய திசையில் நகர்த்தி, முன்னோக்கி கொண்டு செல்ல வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன” என்று குறிப்பிட்டுள்ள கே.சந்திரசேகர் ராவ், எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ எதிராக ஒரு கூட்டணியை உருவாக்குவதல்ல எங்கள் நோக்கம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
“பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். ஆனால், இதுவரை எந்த கூட்டணியும் உருவாக்கப்படவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்தது, நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும், தனி கூட்டணியை உருவாக்குவதா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா என்பது குறித்தும் முடிவு எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு
பல அரசியல் தலைவர்களிடம் பேசி வருகிறேன் என்றும் எதிர்காலத்தில் எங்காவது அனைவரும் சந்தித்து, இந்தியாவை ஒரு புதிய திசையில் நகர்த்துவதற்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து முடிவெடுக்கலாம் என என்னிடம் ஒரு யோசனை உள்ளது என்றும் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.