விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளான ஏவியேசன் டர்பைன் ஃபூயல் (ஏடிஎஃப்) மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட் வரி) 1 முதல் 4 விழுக்காட்டிற்குள் இருக்குமாறு உடனடியாக குறைக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக 22 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “பொருளாதாரத்தை மேம்படுத்து வகையில், மாநிலத்தில் விமானப் பயணத்தை அதிகரிக்கும் பொதுவான நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைக்கப்படும் வரி விகிதம் உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும். “ என அவர் தெரிவித்துள்ளார்.
”விமான நிறுவனங்களின் செலவுகளில் எடிஎஃப்பின் விலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏடிஎஃப் மீது விதிக்கப்படும் வரி அதன் விலையைத் தீர்மானிக்கிறது. அதன் மீதான வரியைக் குறைப்பதனால், மாநிலங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்தை அதிகரிக்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏடிஎஃப் மீதான வரியைக் கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் குறைத்ததால், அந்த மாநிலத்தைச் சுட்டிக்காட்டி அமைச்சர், ”விமான இணைப்பு சுற்றுலா வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நேரடியாகவும், பொருளாதார வளர்சிக்கு மறைமுகமாகவும் பங்களிக்கிறது என கூறியுள்ளார்.
Source : PSU Watch
தொடர்புடைய செய்திகள் :
விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு – எஞ்சிய பங்குகளையும் விற்க முடிவு
வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவே கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு: நிதி அமைச்சகம் தகவல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.