Aran Sei

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா – எஸ்.ஏ. பாப்டேவின் பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர்

ச்சநீதிமன்றத்தின் 48வது நீதிபதியாக என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஏ. பாப்டே பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று – 20 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்

தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைவதையடுத்து என்.வி ரமணாவை நியமிக்குமாறு அவர் பரிந்துரை செய்திருந்தார்.

பிப்ரவரி 17, 2014 ஆம் உச்சநீதிமன்ற நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 24 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கும் ரமணா, ஆகஸ்ட் 26, 2022 வரை பதவியில் நீடிப்பார்.

கொரோனா பரவலை தடுக்க 25 வயது ஆனவர்களுக்கு தடுப்பூசி – பிரதமருக்கு உத்தவ தாக்கரே கடிதம்

ஏப்ரல் 24 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில் ரமணா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்