Aran Sei

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது – ஆய்வு

பாலியல் புகார்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், தினமும் 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், 2017 முதல் 2019 ஆண்டு வரையிலான காலத்தில் போக்சோ வழக்குகளைக் காவல்துறை முடித்த விதம் குறித்து கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது.

”காவல்துறை வழக்கை முடிக்கும் விதம் : போக்சோ சட்டம் 2012-ன் கீழ் பதியப்பட்ட வழக்குகள் பற்றிய விசாரணை” என பெயரிடப்பட்ட ஆய்வறிக்கையை அந்த அறக்கட்டளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 8) வெளியிட்டது.

தேவைப்பட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் – ராகேஷ் திகாயத்

2017 முதல் 2019 வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலே முடித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக, ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.

”குழந்தைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்திற்கு அவசியம் இருப்பதை அறிந்து அரசு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் சட்டம் 2012, (போக்சோ) -ஐ கொண்டு வந்தது. உண்மையில் அதன் அமலாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கிறது” என ஆய்வு தெரிவித்துள்ளது.

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

ஆண்டுதோறும் 3,000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு நியாயமான விசாரணை இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் காவல்துறையால் வழக்கு முடிக்கப்படுவதால், ஒவ்வொரு நாளும் 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும், அந்த ஆய்வு கூறுகிறது.

”என்சிஆர்பி தரவுகளின்படி, பதியப்படும் போக்சோ வழக்குகளில் ஐந்தில் இரண்டு வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, காவல்துறையால் அந்த வழக்குகள் முடிக்கப்படுகின்றன” என ஆய்வு தெரிவிக்கிறது.

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில், 51 விழுக்காடு வழக்குகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களில் பதியப்பட்டுள்ளன.

போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை

”இந்த மாநிலங்களில் சமூக தலையீடுகள் தேவைப்படுவதோடு, வீடுகளிலும் சமூகங்களிலும் குழந்தைகளைச் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்” என கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை கருத்து தெரிவிக்கிறது.

போக்சோ வழக்குகளில் 30 முதல் 64 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும், காவல்துறை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் பிரிவும், நீதிமன்றங்களில் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதலாக விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் தேவைப்படுகின்றன என கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறைக்கட்டளையின் ஆய்வு கூறியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்