Aran Sei

யோகி ஆதித்யநாத்தை சந்திக்க அனுமதிக்கப்படாத இளநிலை மருத்துவர்கள் – மருத்துவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

credits : THE WIRE

 

த்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் இளநிலை மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜான்சி மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த இளநிலை மருத்துவர்கள் முதலமைச்சரை சந்தித்து தங்களது மூன்று கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிக்க இருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

‘உ.பியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை தீர்க்க வேண்டும்’ – யோகி ஆதித்யநாத்திற்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்

இந்நிலையில், இளநிலை மருத்துவர்கள் ஆய்வுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்களது கூட்டம் மாவட்ட நீதிபதி மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருடன் நடைபெற்றுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மாவட்ட நீதிபதி அன்ற வம்சி, முதலமைச்சரை சந்திக்க இளநிலை மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை எனவும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் நிகழ்வுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

இளநிலை மருத்துவர்கள் சமர்ப்பிக்கவிருந்த அந்த அறிக்கையில், நூலகத்தை 24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும். போதிய மருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  அதிகாரிகள் மரியாதையோடு நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தின்போது யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, மூன்று கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்திய மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களது கோரிக்கை தவறானவையா?, முதல்வர் அவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்