ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
49 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2010 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக் செய்து, ஆஃப்கானிஸ்தான், இராக் போர் குறித்த தகவல்களை கசிய விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு கொள்கை விமர்சகர் நோம் சாம்ஸ்கி, “மிக மோசமாக ஏதோ ஒன்று நடக்கப்போவதை நான் எதிர்பார்க்கிறேன். அசாஞ்சே சிறையில் அடைக்கப்படுவது அநியாயமானது, தவறானது.” என்று கூறியுள்ளதாக அல் ஜஸீரா தெரிவிக்கிறது.
பிப்ரவரி மாதம் தொடங்கிய அசாஞ்சேவுக்க எதிரான வழக்கு, அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. தற்போது தென் கிழக்கு லண்டனில் உள்ள பெல் மார்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு, மே மாதம், அமெரிக்காவின் உளவு சட்டத்தின் கீழ், அசாஞ்சே மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதல் நபர் அசாஞ்சே. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 175 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்கிறது அல்-சஸீரா.
அசாஞ்சேவை அமெரிக்க அரசு விடுதலை செய்யவேண்டுமென சமீப காலமாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.