Aran Sei

ஒடிசாவில் ஸ்டீல் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் – பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

டிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திங்கியா கிராமத்தில் முன்மொழியப்பட்ட ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் (ஜேஎஸ்டபிள்யூ) ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரிய மூன்று பொதுநல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான ஒன்றுப்பட்ட விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதி நடத்தவுள்ளதாக ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று(ஜனவரி 31), திங்கியா பகுதியின் நிலைமை குறித்து ஜகத்சிங்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் மற்றும் நீதிபதி ஆர்.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தேதியை நிர்ணயித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை உயர்த்துக – ஒன்றிய அரசுக்கு ஒடிசா முதல்வர் வேண்டுகோள்

கடந்தாண்டு டிசம்பர் 14 அன்று, ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, திங்கியா மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பது குறித்த நிலை அறிக்கையை டிசம்பர் 20 அன்று நீதிமன்றம் கோரியிருந்தது. மேலும், திங்கியா பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் (ஜேஎஸ்டபிள்யூ) லிமிட்., நிறுவனமானது திங்கியாவில் ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் எஃகை உற்பத்தி செய்யும் வகையிலான ஆலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கை – ” ஒடிசா இரும்பு ஆலை நிறுவன விற்பனை இரண்டாம் கட்டத்தை அடைந்தது “

ஒடிசா நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இம்மூன்று மனுக்களிலும், போராட்டக்காரர்கள்மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையை விசாரிக்கவும், திங்கியா பஞ்சாயத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையை திரும்பப் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.

மேலும், ஆலைக்காக தங்களின் நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக கூறி போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்