Aran Sei

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு – திமுக வேட்பாளரின் புகாரையடுத்து காவல்துறை நடவடிக்கை

ரூர் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக, அரவகுறிச்சியின் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு  பதியப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின்போது பேசிய அண்ணாமலை, ”செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பற்களெல்லாம் வெளியே வந்து விடும். கர்நாடக முகத்தைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்” கூறினார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கு – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

அண்ணாமலை மிரட்டல் பேச்சுக்கு எதிராக செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். புகாரை ஏற்றக் காவல்துறையினர் அண்ணாமலை மீது 153 (தேர்தல் விதிமுறை மீறல்), 506/1 (கொலை மிரட்டல்), 64 (தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்தியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது – கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ மகள் பணி இடைநீக்கம்

முன்னதாக அண்ணாமலையின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி, ”திமுகவினரை தொட்டு பார் தம்பி. தமிழகத்தில் பாஜகவின் வேலை எடுபடாது. திமுகவினரை மிரட்ட முடியாது, நாங்க எழுந்தா தாங்கமாட்டீங்க” என தெரிவித்திருந்தார்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்