பத்திரிகையாளர்கள் எழுதுவதற்காகவும் பேசுவதற்காகவும் அவர்களை சிறையில் அடைக்க கூடாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எந்தவொரு துன்புறத்தலும் அச்சுறுத்தலும் இல்லாமல் மக்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டில் திரைப்படத்தின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் முகமது ஜுபைரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்ட அவருக்கு ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
”உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திலும், மக்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவது மிகவும் முக்கியம், பத்திரிகையாளர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். எந்தவொரு துன்புறுத்தலும் அச்சுறுத்தலும் இல்லாமல் பத்திரிகையாளர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.” என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது – எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்
ஜுபைர் கைது செய்யப்பட்டது குறித்து ஐநாவில் நடந்த தினசரி செய்தி மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு துஜாரிக் பதிலளிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.
”பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், என்ன டீவிட் செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதற்காக சிறையில் அடைக்கப்பட கூடாது. இந்த அறை உட்பட உலகின் எந்த பகுதிக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜுபைரின் கைதுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சர்வதேச மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக தவறான செய்திகளை அடையாளம் காண்பதில், முகமது ஜுபைர் மற்றும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் பங்கை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2002 குஜராத் கலவரத்தில் “கிரிமினல் சதி, மோசடி, அப்பாவி மக்களை சிக்க வைக்க நீதிமன்றத்தில் தவறான ஆதாரங்களை வைத்தல்” ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல்துறையின் முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை அதிகாரிகள் டீஸ்டா செடல்வாட் ஆகியோர் கைது செய்யப்பட்ட அடுத்த தினத்தில் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: The Wire
கதறும் தினமலர் | உளறும் அண்ணாமலை, சீமான் | Manushyaputhiran Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.