கொரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியர்களை நான் மத ரீதியாக இழிவுப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் செய்திகளை பரப்பிவருவது, மருத்துவமனை படுக்கைகள் முறைகேடு தொடர்பான விசாரணையை மடைமாற்றச் செய்யும் திட்டமிட்ட சதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாஜக இளைஞர் பிரிவு) தேசிய தலைவரும், பெங்களூரு கிழக்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்குவதில் பெங்களூரு மாநகராட்சி முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
தேஜஸ்வி சூர்யா, அவருடைய உறவினர் மற்றும் பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர் ரவி சுப்ரமணியா, சிக்பெட் சட்டமன்ற உறுப்பினர் உதய் கருடாச்சார், பொம்மனஹல்லி சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ரெட்டி ஆகியோர், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
கங்கையில் வீசப்படும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் : உ.பி மயானங்களில் இடமில்லாததால் நேரும் அவலம்
அந்தக் காணொளியில், தேஜஸ்வி சூர்யா, பெங்களுருவில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டிருக்கும் 17 இஸ்லாமிய ஊழியர்களின் பெயரைப் பட்டியலிட்டு (மன்சூர் அலி, தஹிர் அலி கான், சாதிக் பாட்ஷா, முகமது சயீர், அல்சய் சயீர், உமய்த் கான், சல்மான் குரீத், சமீர் பாட்ஷா) ”யார் இவர்கள்? எப்படி இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்? எதன் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தீர்கள்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைப்பது பதிவாகியுள்ளது.
அப்போது உடனிருந்த தேஜஸ்வியின் மாமா ரவி சுப்ரமணியா, “அவர்களை மாநகராட்சிக்காக நியமனம் செய்துள்ளீர்களா அல்லது மதரசாக்களுக்காக நியமனம் செய்துள்ளீர்களா?” என்றும், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர், ”யார் இவர்கள்?, ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவது போல இந்த 17 பேரை நியமனம் செய்துள்ளீர்களா?” என்று கேட்பதும் அந்த காணொளியில் பதிவாகியிருந்து.
ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்
பெங்களூரு மாநகராட்சி சார்பில் கொரொனா கட்டுப்பாட்டு அறையில், 205 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், மற்ற ஊழியர்களை விடுத்து 17 இஸ்லாமிய ஊழியர்களைப் பட்டியலிட்டதும், சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் வகையில் பேசியபோதும் தேஜஸ்வி சூர்யா அமைதியாக இருந்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனியர்கள் பலி
மேலும், தேஜஸ்வி சூர்யாவால் பட்டியலிடப்பட்ட17 நபர்களின் பெயரும், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு, “பெங்களூரு மாநகராட்சியால் நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள், ஆயிரக்கணக்கான பெங்களூரு மக்களைக் கொலை செய்கின்றனர்” என்ற தகவலுடன் தவறாக பகிரப்பட்டது.
Proud of my colleagues in Bengaluru. pic.twitter.com/26EuOgdU6o
— Arvind Gunasekar (@arvindgunasekar) May 10, 2021
இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”ஒரு முறைகேடு சம்பவத்துக்கு மதச்சாயம் பூசியது ஏன்?” என தேஜஸ்வி சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், தான் இந்த விவகாரத்தை மதரீதியாக கொண்டு செல்லவில்லை எனவும், மருத்துவமனை ஊழியர்களை நான் மத ரீதியாக இழிவுப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் செய்திகளை பரப்பிவருவது மருத்துவமனை படுக்கைகள் முறைகேடு தொடர்பான விசாரணையை மடைமாற்றச் செய்யும் திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்துள்ளார்.
”எதற்காக 16 நபர்களின் (இஸ்லாமியர்கள்) பெயரை பட்டியலிட்டீர்கள்?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”மருத்துவமனையிலிருந்த மூத்த அதிகாரிகள் வழங்கிய பட்டியலையே நான் படித்தேன். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் நான் சுமத்தவில்லை. அவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்று மட்டுமே கேள்வியெழுப்பினேன்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த அன்று தேஜஸ்வி சூர்யாவுடன் உடனிருந்த அவரது மாமா ரவி சுப்ரமணியா, “அவர்களை மாநகராட்சிக்காக நியமனம் செய்துள்ளீர்களா அல்லது மதரசாக்களுக்காக நியமனம் செய்துள்ளீர்களா?” என்றும், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர், ”யார் இவர்கள்?, ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவது போல இந்த 17 பேரை நியமனம் செய்துள்ளீர்களா?” என்று மத ரீதியாக விமர்சித்ததை, கண்டிக்காதது ஏன் என்று தேஜஸ்வி சூரியாவிடம் எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் கூறியதற்கு மட்டுமே பதில் கூற முடியும் என்றும், மற்றவர்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், பத்திரிகையார்கள் ஒரு திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்று பத்திரிகையாளர்களை குற்றம்சாட்டிய தேஜஸ்வி சூர்யா, செய்தியாளர் சந்திப்பில் இருந்து கோபமாக வெளியேறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.