Aran Sei

போராடும் விவசாயிகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கத் தடை – டெல்லி காவல்துறை நடவடிக்கை

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லைப்பகுதிக்கு, பத்திரிகையாளர்கள் செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் காவல்துறையினருக்கும், பேரணியில் கலந்துகெண்ட விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலுக்கு, அரசின் சதித்திட்டம்தான் காரணம் என்று விவசாயிகள் போராட்டக் குழுவான, சம்யுக்த கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது.

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

இதற்கு முன்னர், காவல்துறையினருக்கும், போராடும் விவசாயிகளுக்கும் இடையில் தற்காலிக தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளை தாண்டி, பத்திரிகையாளர்கள் விவசாயிகளுடன் தொடர்புகொள்ள முடிந்ததாக தி இந்து தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது காவல்துறை, அந்த பகுதியில், கண்டெர்னர்களை வரிசையாக அடுக்கியுள்ளதுடன், கான்கிரீட் தடுப்புகளையும் போடப்பட்டுள்ளதா தி இந்து தெரிவிக்கிறது.

இதனால், விவசாயிகள் உள்ள பகுதிக்குள் செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியர தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது, உயிரிழந்த விவசாயி குறித்து செய்தி வெளியிட்டதற்காக, ராஜ்தீப் சார்தேசாய், சித்தார்த் வரதராஜன் உட்பட பல பத்திரிகையாளர்கள் மீது உத்தர பிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்