கடந்த ஆண்டு அக்டோபரில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்திற்குச் சென்றபோது தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு 90 நாள் காவல் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
உத்தரபிரதேச சிறப்பு படையின் துணை காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் பலிவால் ஜனவரி 4 ம் தேதி கைது செய்யப்பட்ட அதிக்-உர் ரஹ்மான், மசூத், ஆலம் மற்றும் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஆகியோரின் நீதித்துறை காவலை நீட்டிக்க முயன்றார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) மற்றும் பிற அமைப்புகளின் அலுவலகங்கள் கேரளாவை மையமாகக் கொண்டிருப்பதால் மேலும் விசாரணையின் போது மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை சிறப்புக் குழுவிசாரிக்க நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் பலிவால் நீதிமன்றதில் கேட்டுக்கொண்டார்.
“மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி அனில் குமார் பாண்டே குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான காவலை இன்னும் 90 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதித்துள்ளார்” என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவ் ராம் சிங் கூறியுள்ளார்.
ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து 90 நாட்களுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது கட்டாயமாகும் என்று பாதுகாப்பு ஆலோசகர் மதுபன் தத் சதுர்வேதி தெரிவித்துள்ளார்
முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் மற்றும் ஐ.டி சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) வோடு நால்வருக்கும் தொடர்பிருப்பதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹத்ராஸ் கொடூரம் – `ஆணவக் கொலை’ எனும் கோணத்தில் விசாரிக்கிறதா சிபிஐ?
உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது PFI உறுப்பினர்கள் வன்முறையைத் தூண்டியதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. பாதிக்கப்பட்ட நபரின் சொந்த கிராமத்தைப் பார்வையிட ஹத்ராஸ் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, நான்கு பேரும் மதுராவில் உள்ள ஒரு டோல் பிளாசாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய சீற்றத்தை கண்ட ஹத்ராஸ் சம்பவத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லி மருத்துவமனையில் இறந்தார்.
ஹத்ராஸ்: சாதிய, பெண் விரோதப் பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை
பின்னர், அவர் தனது சொந்த கிராமத்தில் நல்லிரவில் காவல் துறையினரால் தகனம் செய்யப்பட்டார், உள்ளூர் காவல் துறையினர் இறந்தவரின் இறுதி சடங்குகளை நடத்தும்படி கட்டாயப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.