Aran Sei

பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது – எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

ல்ட் நியூஸ் என்ற செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் இணையதளத்தின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதன்  வழியே ஜனநாயகத்தைப் உறுதி செய்ய முடியும் என்று ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததையும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வெளியிடப்பட்ட ஜி7 நாடுகளின் கூட்டறிக்கையில், திறந்த பொது விவாதம், சுதந்திரமான மற்றும் பன்மைத்துவ ஊடகங்கள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இலவச தகவல்கள், குடிமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சட்டபூர்வமான உரிமை, வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு ஜி7 நாடுகள் உறுதி எடுத்துள்ளன.

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

முகமது ஜுபைரின் ட்விட்டர் பதிவு இந்து உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கலவரத்தைத் தூண்டுவதாகவும் ட்விட்டர் பயனரின் புகாரின் பேரில் 2018 இல் கைது செய்யப்பட்டதாகக்  டெல்லி காவல்துறை கூறியுள்ளது. அவர் மீது பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 295 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது) கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது

உண்மையில், ஜுபைரின் ட்விட்டர் பதிவின் புகைப்படம், ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய 1983 ஆம் ஆண்டு வெளியான ’‘கிஸ்ஸி சே நா கெஹ்னா(ssi Se Na Kehna)’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.  தணிக்கை வாரியத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

பத்திரிகையாளர் முகம்மது சுபேர், செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

முகமது நபி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா பேசும் காணொளியை ட்விட்டரில் வெளியிட்டு உலக கவனத்தை ஈர்த்தவர் முகமது ஜுபைர். இதற்கு அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், நூபுர் சர்மா மீது பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

முகமது ஜுபைர் மற்றும் நுபுர் ஷர்மா இருவரும் மீது ஒரே மாதிரியான பிரிவுகளின் (இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 மற்றும் 295) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. நுபுர் ஷர்மா சுதந்திரமாக இருக்கிறார். அதே நேரத்தில் உண்மை சரிபார்ப்பவர் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

“முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது, ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக போலி செய்திகளை அடையாளம் கண்டு, தவறான தகவல் பிரச்சாரங்களை எதிர்கொள்வதில் ஜுபைரும் அவரது இணையதளமான ஆல்ட் நியாஸும் முன்மாதிரியான பணிகளைச் செய்துள்ளனர். ஒரு தொலைக்காட்சி சேனலில் ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளரின் நச்சுக் கருத்துக்கள் அம்பலமானது” என்று எடிட்டர் கில்டின் அறிக்கை கூறியுள்ளது.

மகாராஷ்டிரா: ‘நடைபிணங்கள்’ – கிளர்ச்சி எம்எல்ஏக்களை விமர்சித்த சஞ்சய் ராவத்

தன்னுடைய நோக்கத்திற்காக சமூகத்தை ஒன்றிணைப்பதற்கும், தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கும் தவறான தகவல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஆல்ட் நியூஸின் செயல்பாடு கோபத்தை ஏற்படுத்தும் என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

முன்னதாக, ஜுபைரின் கைதுக்கு டிஜிட்டல் செய்தி ஊடக அமைப்பு (DIGIPUB) கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெறுமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

“ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு தனிமனிதனும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது.  இது போன்ற கடுமையான சட்டங்கள் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவது நியாயமற்றது”  என்று DIGIPUB அறிக்கை கூறியுள்ளது.

நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது: மத உணர்வை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு

மேலும், “இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெறுமாறு டெல்லி காவல்துறையை DIGIPUB வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான சட்டங்களை கருவியாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் ஜுபைருடன் நிற்கிறோம்” என்று DIGIPUB  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: ndtv

ஓபிஎசை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி SP Lakshamanan Latest Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்