Aran Sei

தவறான செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாசிரியர் மீது வழக்கு – பிணை வழங்கி அம்பாலா நீதிமன்றம் உத்தரவு

ன்முறை  சம்பவத்தில்  ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டது குறித்து தவறான செய்தி வெளியிட்டதன் காரணமாக காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளருக்குப் பிணை வழங்கி ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதல் தகவல் அறிக்கையில்  காவல்துறை கூறியுள்ளது போன்று  இருபிரிவினர் இடையே பகைமூளும் வகையில், பத்திரிக்கையாளர்  எதுவும்  செய்யவில்லை என்றும்  நீதிபதி முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகளை அழிக்க கார்ப்பரேட்டுகளோடு கைக்கோர்த்த ஒன்றிய அரசு’ – ராகேஷ் திகாத் குற்றச்சாட்டு

கடந்த செப்டம்பர் 16 அன்று  அம்பாலா பகுதியில் உள்ள மார்டன் சாஹிப் கிராமப்பகுதியில்  பஞ்சாப் காவல்துறையால் வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டிருந்தார் .

இதுகுறித்து அன்றைய தினம்  செய்தி  வெளியிட்டிருந்த டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை அந்த நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட இடத்தை தவறாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

புனேவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி – 19 பேரை கைது செய்த காவல்துறை

இதனைத்தொடர்ந்து,செப்டம்பர் 17 அன்று கைது செய்யப்பட்ட இடம் குறித்த சரியான தகவல் எனக்குறிப்பிட்டு திருத்தத்துடன்  டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை  செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சுனில் பரர்ரை கைது செய்த காவல்துறை, அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மீதும் வழக்கு பதிந்திருந்தது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் சோனு சூட் – கொரோனா நிதியை மறைத்ததாக வருமானவரித்துறை தகவல்

இந்நிலையில், பத்திரிகையாளர் தாக்கல் செய்த  பிணை மனுவை  விசாரித்த நீதிமன்ற அமர்வு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பத்திரிகையாளர் செயல்படவில்லை என்றுக் கூறி அம்பாலா நீதிமன்ற அமர்வு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்