Aran Sei

உத்திரபிரதேசத்தில் 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு –  ஆக்சிஜன் கிடைத்தும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் நேர்ந்த அவலம்

த்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் கிடைத்தும், வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால், கடந்த 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதித்த ஆறு ஊடகவியலாளர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இடம் கிடைத்து, சொந்த முயற்சியில் ஆக்சிஜனை ஏற்பாடு செய்து, வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

லக்னோவை சேர்ந்த உருது நாளிதழின் செய்தியாளர் சச்சிதானந்த் குப்தா ஏப்ரல் 14 ஆம் தேதி வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழ்ந்தார்.

கொரோனாவும் மன நலமும்: மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

இதே போன்று பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு ஊடகவியலாளரான வினய் ஸ்ரீவாத்ஸ்வாவுக்கு  வெண்டிலேட்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக பிரிவிடம் உதவி கோரப்பட்டது. இந்நிலையில் உதவி கிடைக்க தாமதமானதால் வினய் உயிரிழந்தார்.

இதேப்போன்று கொரொனாவால் பாதிக்கபட்ட, ’பயனியர்’ ஆங்கில நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவு பொறுப்பாளர் தவிஷி ஸ்ரீவாத்ஸ்வா, பவண் மிஸ்ரா, அங்கிட் சுக்லா, பிரோமத் ஸ்ரீவாத்ஸவா ஆகியோரும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசின் பாகுபாட்டை எதிர்த்து மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் – ப.சிதம்பரம் வேண்டுகோள்

மேலும், லக்னோவில் 15 ஊடகவியலாளர்களும், ஊடகவியலாளர்களின் உறவினர்கள் என சுமார் 20 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஊடகவியலாளர்களை கொரோனா போராளிகளாக அறிவித்து அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், லக்னோவை தவிர உத்திரபிரதேசத்தின் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் வரவில்லை.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்