Aran Sei

வேட்பாளர் தேர்வில் குழப்பம், போராட்டம்: ‘காங்கிரஸில் பணமிருந்தால்தான் சீட் – ஜோதிமணி விமர்சனம்

தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து, அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 13), தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தைப் பகிர்ந்துள்ள ஜோதிமணி, “காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

“நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

‘எதிரி பாஜகவை விடுத்து, சிபிஎம்-யை எதிர்க்கும் காங்கிரஸ்’ – குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

மேலும், “எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால், இன்று நான் பாராளுமன்ற உறுப்பினர்  கிடையாது. இந்தத் தலைவர்கள், தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

“உண்மையான கட்சி விசுவாசிகளுக்குக் கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்