Aran Sei

ஜோமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சாலை விபத்துகளுக்கே வழிவகுக்கும் – மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்

10 நிமிடங்களுக்குள் உணவை டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவனத்தின் புதிய திட்டத்தால், உணவை டெலிவரி செய்பவர்கள் மற்றும் அவர்களுடன் சாலையில் பயணிப்பவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.

ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை – கடந்த 5 நாட்களில் 3.20 ரூபாய் உயர்வு

உணவு விநியோக நிறுவனமான ஜோமேட்டோ, 10 நிமிடங்களுக்குள் உணவை டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “இத்திட்டத்தால் உணவை டெலிவரி செய்பவர்கள் சாலையில் வேகமாகப் பயணிக்க வேண்டிய கட்டாயத்தால் அவர்களுக்கும், சாலையில் உள்ள மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும். ஆதலால் இந்த 10 நிமிட டெலிவரி திட்டத்தை மாற்றுமாறு ஜோமேட்டோ நிறுவனத்திடம்” மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.

“ஜோமேட்டோ நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் அதனால் சாலை விபத்துகளும் ஏற்படும். இதற்கு அந்த நிறுவனமே பொறுப்பாகும். உணவு விநியோகம் செய்பவர்கள் மிக வேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டினால் தான் 10 நிமிடங்களில் தங்களது இலக்கை அடைய முடியும்” என்று அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.

ஷிவமொக்காவைத் தொடர்ந்து சாகர் நகர் – திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை போட எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத்

வரும் ஏப்ரல் முதல் குருகிராம் நகரில் ஜோமேட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டத்தைத் துவங்கப் போவதாக ஜோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு சமூக வலைதங்களில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்