Aran Sei

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்

Credit: The Hindu

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் செயல்படும் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு, ஜி-20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து விசாரிக்க சர்வதேச குழுவை அமைத்த ஐ.நா – வாக்களிப்பில் கலந்து கொள்ளாத இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக நேட்டோ நாடுகளின் அவசர கூட்டத்திற்கு பிறகு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், மற்ற உலகத் தலைவர்களிடம் இந்த பிரச்சினையை எழுப்பியதாகக் கூறியுள்ளார்.

“ரஷ்யாவை ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து நீக்க விரும்புகிறேன். ஆனால் இதற்கு இந்தோனேசியா அல்லது மற்ற நாடுகள் உடன்படுமா?.” என தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் தலைவர்களை பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் விலை உயர்வு

ரஷ்ய அதிபர் புதினின் தாக்குதல் காரணமாக உக்ரைனிற்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது புதிய தடைகளையும் விதித்துள்ளன.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்