Aran Sei

அமெரிக்காவில் மீண்டும் அமலானது ‘ரிமைன் இன் மெக்சிக்கோ’ – நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்கினார் அதிபர் ஜோ பைடன்

ட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தற்காலிகமாக முன்னாள் அதிபர் ட்ரெம்ப்பின் கொள்கையான ‘ரிமைன் இன் மெக்சிக்கோ’ கொள்கையை, வரும் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இக்கொள்கையானது அமெரிக்காவில் புகலிடம் கோருபவர்கள்,  அமெரிக்க குடியேற்ற நீதிமன்றத்தில் தங்களுடைய விசாரணைகளுக்காக மெக்ஸிகோ நாட்டில் காத்திருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.

பட்டினி குறியீட்டு பட்டியல்: 101- வது இடத்தில் இந்தியா – மோடியே காரணமென குற்றஞ்சாட்டிய கபில்சிபில்

இந்த ஆண்டு, அதிபர் ஜோ பைடன் பதவியேற்றபோது ட்ரம்ப் நிர்வாகத்தின் ‘ரிமைன் இன் மெக்ஸிகோ’ கொள்கையை ரத்து செய்ததோடு, புகலிடம் கோருவோரை நீதிமன்ற விசாரணைகளுக்காக மெக்ஸிகோவில் காத்திருக்க வைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று விமர்சித்திருந்தார். இக்கொள்கையானது புலம்பெயர்ந்தோர் தடுப்பு நெறிமுறை என்று அழைக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஏப்ரல் மாதத்தில், டெக்சாஸ் மற்றும் மிசோரி மாகாணங்கள், ‘ரிமைன் இன் மெக்ஸிகோ’ கொள்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம், டெக்சாஸின் கூட்டாட்சி நீதிபதி, நிறுத்தி வைக்கப்பட்ட ‘ரிமைன் இன் மெக்ஸிகோ’வை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார்.

ஜோ பைடனின் நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து, கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும்  சட்ட போராட்டம் செய்தும் தோல்வியடைந்தது. பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்குவதாகக் ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்தது.

Source: nbcnews.com

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்