Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜே.என்.யூ மாணவர் – தேசத்துரோக வழக்குப் பதிந்த காவலகத்துறை

2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ​​ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) சுமத்தியுள்ளது. 2020 ஜனவரியில் இருந்து ஷர்ஜீல் இமாம் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124 (தேசத்துரோகம்), 153ஏ (மதத்தின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல்), 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்), 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்), 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் தேசத்துரோக வழக்கான ஊபா ஆகிய குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஷர்ஜீல் இமாம் மீது டெல்லி நீதிமன்றம் சுமத்தியுள்ளது.

கோவை தேவாலயத்தின் புனிதர் செபாஸ்டியரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் – காவல்துறை விசாரணை

2019 டிசம்பர் 13, அன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில், டிசம்பர் 16, அன்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் ஷர்ஜீல் இமாம் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த உரையில் அசாம் மற்றும் பிற வடகிழக்கு பகுதிகளை இந்தியாவிலிருந்து துண்டித்து விட வேண்டும் என்று அவர் பேசியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2019 டிசம்பரில் ஒன்றிய அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகவும் ஷர்ஜீல் இமாம் மீது டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்