Aran Sei

ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் – ஊதியம் அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தப்படும் தூய்மைப்பணியாளர்கள்

டந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என அகில இந்திய தொழிலாளர்கள் (AICCTU) சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசுக்கு உரிமை கிடையாது – தனியார்மயமாக்கலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராட்டம்

கொரனோ காலகட்டத்தில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து 23 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் போதிய சம ஊதியம், பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – விவசாயிகள் இணையும் மகாபஞ்சாயத்து

இதுகுறித்து தெரிவித்துள்ள அகில இந்திய தொழிலாளர்கள் (AICCTU) சங்கம், கடந்த ஜூன் மாதம் வரை 12,900 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்பட்டதாகவும், இந்நிலையில் கடந்த நவம்பரிலிருந்து தற்போதுதான் இரண்டு மாத போராட்டத்திற்கு பின் 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது குறித்து தெரிவித்துள்ள அகில இந்திய பொது ஊழியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஊர்மிளா சவுகான், “ஊதியமே வழங்கப்படமால் கொத்தடிமையாக நடத்தப்பட்டுள்ளார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

SOURCE ;PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்