Aran Sei

ஜம்மு காஷ்மீர் போராட்டதின் எதிரொலி: 4ஜி இன்டர்நெட் சேவைக்கு தடையை நீட்டித்த அரசு

ம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிவேக 4 ஜி மொபைல் இன்டர்நெட் மீதான தடையை ஜனவரி 8 வரை நீடித்துள்ளது. மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை இடையூறு செய்ய நினைக்கும் போராட்டக்காரர்களுக்கு “அதிவேக இணைப்புக்கான கட்டுப்பாடுகள் தடையாக இருந்தது. ஆகையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று மாநில உள்துறை நிர்வாகம் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“சமீபத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் பல அரசியல் காட்சிகள் பங்கேற்று  பெரிய அளவிலான வாக்குப்பதிவைக் கண்டது. ஆனால், பொது நலனைக் குலைக்க விரும்பியவர்கள் தேர்தல்கள் முடிந்ததிலிருந்து எரிகுண்டுகளை வீசுவது போன்ற பல நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருவதன் வழியே இத்தேர்தல் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை என்பது  தெளிவாகத் தெரிகிறது.  பொதுமக்கள், காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை போராட்டக்காரர்கள் குறிவைத்துள்ளனர்” என்று ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது

‘மோடிக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறேன்’ – ஜம்முவைச் சேர்ந்த ராகுல் சர்மா

.ஏராளமான போராட்டக்காரர்கள் எல்லையைத் தாண்டி ஊடுருவ முயற்சிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது. “அதிவேக மொபைல் இணைய இணைப்பு மீதான கட்டுப்பாடுகள் இத்தகைய முயற்சிகளுக்கு ஒரு தடையாகச் செயல்படும். இதைத் தொடர்ந்து, கந்தர்பால் மற்றும் உதம்பூர் மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜனவரி 8 வரை இந்தத் தடையை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது”என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்ம -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த போது அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, ​​மொபைல் தொலைபேசிகளில் 2 ஜி இணைய சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

தெற்கு காஷ்மீர், ஷோபியன் மாவட்டத்தில் நேற்று நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரிடம் ஒரு போராட்ட குழு சிக்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டத்தில் 2 ஜி இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்