Aran Sei

உபா சட்டத்தில் கைதான மூவர் விடுவிப்பு : முறையாக விசாரிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு

ம்மு காஷ்மீர் மாநிலத்தில், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ், கைதுசெய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்காத விசாரணை அதிகாரி மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன்  எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது: ‘இஸ்லாமியர் என்பதால் பலிகடா ஆனேன்’ – நதீம்

கடந்த ஆண்டு ,கிஷ்த்வார் மாவட்டத்தில் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையோர் எனக் குற்றம்சாட்டப்பட்டு உபா சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரின், மீது துணைக்காவல் கண்காணிப்பாளர் சன்னி குப்தா முறையான விசாரணையில் ஈடுபடவில்லை என்று நீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் மூவரை விடுத்தும் நீதிபதி சுனித் குப்தா உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

தந்தையின் இறுதிச் சடங்கில் முழக்கமிட்ட மகன்கள் உபா சட்டத்தில் கைது: ஒன்றிய அரசு அருவருப்பாக நடந்து கொள்வதாக தலைவர்கள் கண்டனம்

அதுமட்டுமல்லாது,குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை “விசாரணை அதிகாரி எந்த சூழலில் எதனால் முறையான சேகரிக்கவில்லை,இதனால் முக்கியமான ஆவணங்களை தவறவிட்டுள்ளார்” என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போதிய ஆவணங்கள் இல்லாத போது ஒருவரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது எவ்வாறு என்று நீதிபதி சுனித் குப்தா தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

 

மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள நீதிமன்ற அமர்வு”இது போன்ற வழக்குகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு தொடர்புடையவை என்கிற காரணத்தினால் தான் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் துணைக்காவல் கண்காணிப்பாளர் சன்னி குப்தா விசாரித்ததிற்கு பதிலாக ஒரு தலைமைக்காவலர் விசாரித்திருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று நீதிபதி சுனித் குப்தா கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்