Aran Sei

காஷ்மீரில் சட்டவிரோதமாகக் பங்களா கட்டிய பாஜக தலைவர்- ஆர்டிஐ தகவலில் அம்பலம்

பாஜகவைச்  சேர்ந்தவரும்,  ஜம்மு காஷ்மீர்  மாநில முன்னாள் துணை அமைச்சருமான  நிர்மல் சிங் அம்மாநில பகுதியில்  கட்டிய பங்களா  சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என  கண்டறியப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  தெரியவந்துள்ளது.

கடந்த   2016 முதல் 2020 வரை பான் மற்றும்  பஞ்ச்கிரெயின் பகுதிகளில்  கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள்குறித்து  வழக்கறிஞர் முசாபர் சிங் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள யூனியன் பிரதேச நிர்வாகம், இந்த பங்களா சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையிலும் கட்டிட செயல்பாட்டு சட்டம், 1988 ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டு ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

 

 

கடந்த 2௦17 ஆம் ஆண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது துணை முதலமைச்சராக இருந்த நிர்மல் சிங் , அப்போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்துக்கு சொந்தமாக ஆயுத கிடங்குக்கு அருகிலேயே பங்களா கட்டியுள்ளார்.

மேலும், இந்தப் பங்களா ஆயுத கிடங்கிலிருந்து 580 கஜம் தொலைவில்  இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த  2015 ஆம்  ஆண்டு ஒன்றிய அரசு  வெளியிட்டுள்ள விதியில் ,  ராணுவக் கட்டமைப்புகளிருந்து  1000 கஜம் தொலைவில் எந்தக் கட்டிடமும் கட்டப்படக் கூடாதென  கூறப்பட்டுள்ள  நிலையில், இந்தப் பங்களா  விதி மீறிக் கட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

SOURCE: THE WIRE 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்