Aran Sei

வழக்கு இருந்தால் வேலை இல்லை – ஜம்மு காஷ்மீரின் புதிய சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

ம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது தெரியவந்தால், அவரக்ளை பணி நீக்க வகை செய்யும் வகையில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொண்டுவந்திருக்கும் புதிய சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர்ப்பாளர்களை ஒடுக்க இது போன்ற சட்டங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு காவல்துறையிடம் இருந்து நன்சான்றிதழ் பெறுவது அவசியம் என ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தினங்களில், இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆறு லட்சம் அரசு ஊழியர்களின் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது.

முறையான விசாரணையின்றி, சுமார் 25க்கும் அரசு ஊழியர்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பணி நீக்கம் செய்து சரியான ஒரு மாதம் கழித்து, செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தப் புதிய உத்தரவு வந்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜுலை மாதம் இந்திய அரசியலமைப்பின் 311வது பிரிவைப் பயன்படுத்தி முறையான விசாரணையின்றி 11 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் இருக்கும் இந்த முடிவு ‘தன்னிச்சையானது’ என்றும், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளன.

”நிர்வாகத்தின் இந்தச் சர்வாதிகார உத்தரவு மக்கள் நலனிற்கு எதிரானது. இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு பதிலாக, மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை அரசாங்க உறுதி செய்ய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஒய். தரிகாமி தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் நடத்தை விதிகளுக்கு அரசு ஊழியர்கள் உட்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் நிர்வாகி, “ஒன்றிய அரசு மற்றும் அதன் அரசியலமைப்பிற்கு முழுமையான ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் விசுவாசத்தை கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்