ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரனா தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்தி வைத்து அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 1 மில்லியன்பேரில் 6 பேருக்கு ரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு அறிவித்துள்ளது.
Please join us via YouTube for an audio press conference at 10 a.m. EDT. We will keep the public updated as we learn more. https://t.co/fWguuQzhMR
— U.S. FDA (@US_FDA) April 13, 2021
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் , வரும் புதன்கிழமை அன்று அமெரிக்க நோய் தடுப்பு குழுவுடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம்குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
கொரனோ தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டும் – உச்சநீதி மன்றத்தில் மனு
இதுகுறித்து முடிவுகள் எட்டப்படும் வரை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரனோத் தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்தி வைத்துப் பரிந்துரைத்துள்ளதாகவும் அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.