Aran Sei

ஜின்னா கோபுரம் சர்ச்சை: பாஜகவினர் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதற்குப் பதிலாக மக்களுக்கு உதவலாம் – முகமது முஸ்தபா

ஜின்னா கோபுரத்தை இடித்து விடுவதாக ஆந்திர பாஜக மிரட்டல் : கோபுரத்திற்கு தேசிய கொடியின் மூவர்ணத்தை வரைந்த ஆந்திர அரசு

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள ஜின்னா கோபுரத்தின் பெயரை மாற்றாவிட்டால் அதனை இடித்து விடுவோம் என்று ஆந்திர மாநில பாஜகவின் மிரட்டலை அடுத்தது கோபுரமானது தேசியக் கொடியின் மூவர்ணத்தில் வரையப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26 அன்று தடை உத்தரவை மீறி, ஜின்னா கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்ற முயன்றதற்காக இந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பரில், ஜின்னா கோபுரத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்றும் ஆந்திர அரசு தங்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால் ஜின்னா கோபுரத்தை இடித்தது விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என்று பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

‘‘பல்வேறு குழுக்களின் கோரிக்கையை ஏற்று, ஜின்னா கோபுரத்தை மூவர்ணக் கொடியின் நிறத்தால் அலங்கரிக்கவும், கோபுரத்தின் அருகே தேசியக் கொடி ஏற்றும் வகையில் கம்பம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குண்டூர் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார்.

“பாஜக தலைவர்கள் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதற்குப் பதிலாக கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்று முகமது முஸ்தபா கூறியுள்ளார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்